My rants about anything and everything. My personal space to write my ramblings. Feel free to disagree.

Thursday, June 3, 2010

/

எனக்கு தமிழ் நல்லா பேச வரும். ரொம்ப வேகமா இல்லாட்டாலும், ஓரளவுக்கு படிக்கவும் தெரியும். ஆனா எழுதறதுதான் கொஞ்சம்.... இல்ல ரொம்பவே கஷ்டம். Especially இந்த 'na', 'la' use பன்னனும்கரதுல எல்லாம் பயங்கர doubt. Thanks to Google, இந்த மாதிரி transliteration பண்ண முடியறது, helping people like me.

Still, என்னோட உயிர் தோழி help பண்றேன்னு சொல்லியிருக்கா, to atleast proof read.நான் இப்போ அவளைத்தான் ரொம்ப நம்பியிருக்கேன்
 
அந்த நம்பிக்கைல நானும் இப்போ தமிழ்ல கிறுக்க ஆரம்பிக்க போறேன். அங்க அங்க english use பண்ணுவேன். வேற வழி இல்ல. After all இந்த blog எல்லாமே நம்ம நேர்ல ஒருத்தர பாத்து பேசறது போல தான் இருக்கணும்கறது என்னோட எண்ணம். Besides, there is one more reason. 
நான் தமிழ் படிக்க கத்துண்டதே saloon போகும்போதெல்லாம், அங்க இருக்குற பத்திரிகைகளை படிச்சிதான்.

அதுல எனக்கு படிக்க ரொம்பவே கஷ்டமா இருந்தது எதெல்லாம்னா இந்த English words அ தமிழ்ல எழுதியிருப்பாங்களே, அதுதான்.

போட்டு கொலை பண்ணியிருப்பாங்க. நானும் அத எழுத்து கூட்டி படிச்சி புரிஞ்சிக்கறதுக்குள்ள 2 பேரு cutting and shaving முடிச்சிண்டு போயிடுவாங்க.

So, என்னோட இந்த blog ல அந்த கஷ்டத்த நான் கொடுக்க மாட்டேன்.
நிறைய எழுதனும்னு ஆசை படறேன்... பாக்கலாம்.

2 comments:

Mouli said...

நல்வரவு! பல நல்ல பதிப்புகள் இட வாழ்த்துக்கள்!

Karthik Padmanabhan said...

மௌலி அண்ணா... I just have one word for you... Relentless, which you are, in anything. I hope you remember the 'Nachiketha' connection of that word.

But உங்கள போல எனக்கு எழுத தெரியாது. நீங்க நக்கீரர் relation, கம்பர் roommate, ஒவ்வையார் பேரன்.
நானோ செந்தமிழையே Red Tamil னு translate பண்ணி பேசற வர்க்கம்.

Blog post யே 'பதிவு' னு சொல்லனும்னு இப்போ தான் தெரிஞ்சுண்டேன்.

Thank you for comment. Hope I will be able write atleast சில நல்ல பதிப்புகள்.

Search This Blog

Text Widget

About us

My Instagram

Pages

Followers

Unordered List

Popular Posts

BTemplates.com

| Free Blogger Templates